2026-ல் Free AI Tools மூலம் YouTube & Instagram-ல் பணம் சம்பாதிப்பது எப்படி? - முழுமையான வழிகாட்டி!

ஒரு மடிக்கணினியில் (Laptop) YouTube மற்றும் Instagram அனலிட்டிக்ஸ் வரைபடங்கள் காட்டப்படுகின்றன. பின்புறம் 'AI YouTube Channels' மற்றும் கீழே தமிழில் 'எப்படி தொடங்குவது?' என்ற வாசகம் இடம் பெற்றுள்ள ஒரு 3D டிஜிட்டல் ஒர்க்பேஸ் (Workspace) புகைப்படம்.
வணக்கம் வாசகர்களே!,இது உங்கள் MRK-Earning இன்றைய காலத்தில் பலருக்கும் தோன்றுகின்ற ஒரு விஷயம் youtube சேனல் தொடங்கி வருமானம் ஈட்டுவது மற்றும் இன்ஸ்டாகிராமில் சேனல்கள் உருவாக்கி வருமானம் ஈட்டவும் ஆசைப்படுகின்றன ஆனால் அதற்கு கேமரா மற்றும் லேப்டாப் அல்லது சிறந்த மொபைல் மிக  முக்கியமான பொருட்களாக உள்ளன ஆனால் இவை எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண மொபைலை வைத்து  இன்று பலரும் தங்களின் முகத்தை காட்டாமலேயே (Faceless Channels) AI கருவிகளைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி பெரும் வருமானம் ஈட்டி வருகின்றனர். நீங்களும் இதில் சாதிக்க விரும்பினால், இந்த கட்டுரை உங்களுக்கானது.

1. சரியான டாபிக்கை (Niche) தேர்வு செய்வது எப்படி?

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி Fitness, Finance, Animation மற்றும் Motivation போன்ற துறைகளில் YouTube சேனல் தொடங்குவதற்கான வழிகாட்டி படம். இதில் HeyGen, Leonardo.ai மற்றும் ElevenLabs கருவிகள் இடம்பெற்றுள்ளன.
புதிதாக சேனல் தொடங்கக்கூடிய நபர்கள் செய்யும் சிறிய தவறு ஏற்கனவே போட்டிகள் நிறைந்த டாப்பிக்கை தேர்வு செய்வது youtube-ல் விரைவாக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தனித்துவமான டாபிக்ல வீடியோஸ் போடணும் அதாவது எந்த ஒரு சேனலுக்கும் அதன் 'டாபிக்' தான் முதுகெலும்பு. AI-க்கு ஏற்ற மற்றும் அதிக வருமானம் தரக்கூடிய சில சிறந்த டாபிக்குகள் இதோ:
  • AI & டெக்னாலஜி டுடோரியல்ஸ்: புதிய AI டூல்களை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுக்கொடுப்பது (High CPM). தமிழ் மொழியில் போட்டிகள் குறைந்த ஒரு டாபிக். ஏ ஐ கருவிகளைக் கொண்டு எப்படி ஒரு போட்டோவை சிறப்பாக எடிட் செய்வது என்று ஷார்ட்ஸ் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யலாம் அதாவது சிறு சிறு டிப்ஸ்களாக கூறலாம் எடுத்துக்காட்டாக பேக்ரவுண்ட் ரிமூவர் செய்வது படத்தின் குவாலிட்டி உயர்த்துவது மற்றும் கலர் கிரேடிங் எப்படி செய்வது என்று சிறிய டிப்ஸ்கள் சொல்லலாம் போட்டிகள் இல்லாத சிறந்த டாபிக்குகளில் இதுவும் ஒன்று.
  • தனிநபர் நிதி மற்றும் முதலீடு (Personal Finance): கிரிப்டோ, பங்குச்சந்தை அல்லது சேமிப்பு டிப்ஸ். பைனான்ஸில் நமக்குத் தெரிந்த தகவல்களை விட AI கருவிகளுக்கு அதிகமான தகவல்கள் தெரியும் அதனால் AI கருவிகளை பயன்படுத்தி ப்ரொபஷனல் பைனான்ஸ் டிப்ஸ்களை சார்ட் வீடியோக்களாக பதிவிடலாம் எடுத்துக்காட்டாக பணத்தை எப்படி சேமிப்பது என்று 2026 காண AI சொல்லும் சேமிப்பு திட்டம், ஏ ஐ கருவியை பயன்படுத்தி ஸ்டாக் மார்க்கெட் ட்ரேடர்களுக்கும் டிப்ஸ் கூறலாம் டெக்னிக்கல் அனலைசிஸ் என்றால் என்ன அப்படி என்று AI இடம் கேள்வி எழுப்பி அது தரும் பதில்களை காப்பி செய்து வாய்ஸ் ஓவர் ஏய்களை கொண்டு ஆடியோவாக மாற்றி அதற்கு ஏற்ற படங்களை கொடுத்து வீடியோக்கள் உருவாக்கலாம்.
  • ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி: AI அவதார்களை வைத்து யோகா அல்லது டயட் டிப்ஸ் வழங்குவது. ஒரு நபர் உடற்பயிற்சி செய்வது போல AI கருவிகளை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி அதற்கு ஒரு மோட்டிவேஷன் மியூசிக் அல்லது சாங்ஸ் சேர்த்து யூடியூப்பில் பப்ளிஷ் செய்யலாம்.
  • சுய முன்னேற்றம் மற்றும் ஊக்கம் (Motivation): தத்துவங்கள் மற்றும் மோட்டிவேஷனல் கதைகள்.AI வீடியோவிற்கு இதைப் பயன்படுத்துவது எப்படி?நீங்கள் ஒரு"Motivational Tamil" என்ற சேனல் ஆரம்பிக்கிறீர்கள் என்றால், கீழே உள்ள முறையைப் பின்பற்றலாம்:வீடியோ ஸ்கிரிப்ட் உதாரணம் (60 Seconds):
  • ஆரம்பம் (Hook): "வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா? நில்லுங்கள்! ஒரு நிமிடம் இதை கேளுங்கள்."
  • தத்துவம் (The Core): "புத்தர் சொன்னது போல, 'நமது எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன.' நீங்கள் பலவீனமானவர் என்று நினைத்தால் பலவீனமாகிவிடுவீர்கள். வலிமையானவர் என்று நினைத்தால் எதையும் சாதிப்பீர்கள்."
  • உத்வேகம் (The Push): "நேற்று நடந்ததை மாற்ற முடியாது, ஆனால் நாளை நடக்கப்போவதை உங்கள் இன்றைய உழைப்பால் தீர்மானிக்க முடியும். இப்போதே தொடங்குங்கள்!" என்று இதுபோல மோட்டிவேஷனல் வீடியோக்களை AI கருவிகளைக் கொண்டு எளிமையாக உருவாக்கலாம்.

 இதற்கான சிறந்த AI டூல்கள்:

  1. Leonardo.ai: ஒரு முனிவர் அல்லது சாந்தமான மனிதர் பேசும் உயர்தர படங்களை உருவாக்க.
  2. HeyGen / D-ID: அந்தப் படத்தை நிஜ மனிதர் போலப் பேச வைக்க.
  3. ElevenLabs: கம்பீரமான குரலில் (Voiceover) பின்னணி இசை சேர்த்து குரல் கொடுக்க.
  • வரலாற்று மற்றும் மர்ம கதைகள்: பழைய கால மர்மங்கள் அல்லது வரலாற்று நிகழ்வுகளை படங்களுடன் விளக்குவது. 
  • உதாரணத்திற்கு: டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை வைத்து ஒன்று சேர்த்து அவருடைய வாழ்க்கை கதையை கூறி ஒரு வீடியோவாக உருவாக்கலாம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை ஒன்று சேர்த்து அவருடைய வாழ்க்கை கதையை கூறுவது போல வீடியோக்களை பதிவிடலாம். அல்லது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களைப் பற்றியும் அங்குள்ள மர்மங்களை பற்றியும் ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறு படங்கள் மற்றும் வீடியோக்களை சேர்த்து ஒரு காட்சியாக உருவாக்கி அதைப் பதிவிடலாம்.இது பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும் விரைவாக youtube சேனல் வளர்ச்சி அடையும்
எனது பரிந்துரை: நீங்கள் தொடக்கத்தில் "AI Tools & Productivity Hacks" அல்லது "Health & Wellness" டாபிக்கை தேர்வு செய்யலாம். இதற்குத் தேவையான தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

2. இலவச AI கருவிகள்: வீடியோ உருவாக்கும் படிநிலைகள்

Professional 3D infographic titled "Free AI Tools for Video Creation" featuring Gemini and ChatGPT for prompt writing, ElevenLabs and Murf AI for voiceover, Pexels and Leonardo AI for photos and videos, Canva and InVideo AI for video editing in a dark neon tech background.
வீடியோ உருவாக்க நாம் நான்கு முக்கியமான நிலைகளைக் கடக்க வேண்டும். இவை அனைத்திற்கும் இலவச டூல்கள் உள்ளன.

படி 1: ஸ்கிரிப்ட் எழுதுதல் (Scripting)டூல்: 

அனைவரும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய ChatGPT அல்லது Gemini யை பயன்படுத்தி.உங்கள் தலைப்பை கொடுத்தால், அதுவே வீடியோவிற்கான முழு வசனத்தையும் எழுதித் தரும்.
  • டிப்ஸ்: "Create a 60-second viral Instagram Reel script about 5 daily habits for success" என்று கட்டளை (Prompt) கொடுக்கவும்.

படி 2: குரல் உருவாக்குதல் (Voiceover)டூல்: 

ElevenLabs அல்லது Murf.ai.
உங்கள் ஸ்கிரிப்டை அப்படியே மனிதக் குரலாக மாற்ற இவை உதவும். இதில் தமிழ் உட்பட பல மொழிகள் உள்ளன. ElevenLabs-ல் மிக எதார்த்தமான குரல்கள் இலவசமாகக் கிடைக்கும்.

படி 3: வீடியோ மற்றும் படங்கள் (Visuals)டூல்: 

Pexels, Pixabay (இலவச வீடியோக்கள்) அல்லது Leonardo.ai (AI படங்கள்).
உங்கள் கதைக்கு ஏற்ற உயர்தர வீடியோக்களை இங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம். முகமே காட்டத் தேவையில்லை!

படி 4: வீடியோ எடிட்டிங் (Editing)டூல்:

 InVideo AI, CapCut அல்லது Canva.இன்று InVideo AI போன்ற கருவிகள் நீங்கள் கொடுக்கும் ஒரு வரியிலேயே முழு வீடியோவையும் உருவாக்கித் தந்துவிடும். இதில் பின்னணி இசை, சப்டைட்டில்ஸ் என அனைத்தும் தானாகவே அமைந்துவிடும்.

3. வருமானம் ஈட்டும் வழிகள் (Monetization Strategy)

High-quality 3D infographic design titled Monetization Strategies featuring YouTube AdSense with gold coins, affiliate marketing shopping cart link icon, brand sponsorship handshake icon, and Instagram subscriptions heart with subscribe button on dark neon background
வீடியோக்களை அப்லோட் செய்தவுடன் பணம் வராது. அதற்குச் சில வழிகள் உள்ளன:
  1. YouTube AdSense: மேற்கொண்ட டாபிக்ஸ் மற்றும் AI கருவிகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக வீடியோக்கள் பதிவு செய்வதன் மூலம் உங்கள் சேனல் 1000 சந்தாதாரர்களையும் 4000 மணிநேர பார்வைகளையும் எட்டியதும் விளம்பரங்கள் மூலம் பணம் பெறலாம்.
  2. Affiliate Marketing: நீங்கள் விளக்கும் AI டூல்கள் அல்லது பொருட்களின் லிங்குகளை டிஸ்கிரிப்ஷனில் கொடுத்து, அதன் மூலம் யாராவது வாங்கினால் கமிஷன் பெறலாம்.                                         
  3. Brand Sponsorship: உங்கள் சேனல் வளரும்போது, நிறுவனங்கள் தங்கள் பொருளை விளம்பரப்படுத்த உங்களுக்குப் பணம் தருவார்கள்.
  4. Instagram Subscriptions: இன்ஸ்டாகிராமில் உங்களது பிரத்யேக டிப்ஸ்களைப் பெற சந்தா கட்டண முறையைப் பயன்படுத்தலாம்.

4. SEO மற்றும் YouTube வளர்ச்சிக்கான டிப்ஸ் (SEO Tips for Blog & Video)

கூகுள் மற்றும் யூடியூப் தேடலில் உங்கள் வீடியோ வர இதோ சில எளிய வழிகள்:
  • Keywords: உங்கள் தலைப்பிற்கு ஏற்ற வகையில் அதாவது நீங்கள் AI பற்றிய வீடியோக்கள் பதிவிட்டால் "Free AI Tools", என்றும் அல்லது வருமானம் சார்ந்த வீடியோக்கள் பதிவிட்டால்"How to earn money online" போன்ற வார்த்தைகளைச் சேர்க்கவும். நீங்கள் வைக்கும் தலைப்பு பார்வையாளர்கள் எப்படி search செய்வார்களோ அதை போல் இருக்க வேண்டும் குறிப்பாக நீளமான வார்த்தைகள் இருக்க வேண்டும் இயல்பான வரிகளில் நாம் கூகுள் இடம் எதையாவது பற்றி தேடும் போது எப்படி சர்ச் செய்வோம் அதே மாதிரியான வார்த்தைகளை தலைப்பாக வைக்க வேண்டும்.
  • Thumbnail: பார்ப்பவர்களைக் கவரும் வகையில் பளிச்சென்ற நிறங்களில் தம்ப்நெயில் (Thumbnail) உருவாக்க Canva-வை பயன்படுத்தலாம்.
  • Hashtags: #AI #PassiveIncome #TamilTech #OnlineEarning # tamilmistry #TamilTech #templesmistry #mistery stores போன்ற டிரெண்டிங் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தலாம். ஏதாவது ஒரு #டக்ஸ் ஐ மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும் இது உள்ள வீடியோவிற்கு தொடர்ச்சியான பார்வையாளர்களை கொண்டு வரவும். 
  • Consistency: வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 வீடியோக்களையாவது பதிவிடவும்.

முடிவுரை:

நண்பா, AI என்பது ஒரு மந்திரக்கோல் போன்றது. அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தால் வீட்டிலிருந்தே ஒரு பெரிய மீடியா பிசினஸை உருவாக்க முடியும். நம்மால் முடியுமா என்று நினைக்காமல் இப்போதே முதல் அடியை எடுத்து வை! *வெற்றி பெற MRK Earnings இன் வாழ்த்துக்கள் *

FAQ அடிப்படைக் கேள்விகள் 

1. 2026-ல் AI YouTube Channels தொடங்குவது சாத்தியமா ?

ஆம்! 2026-ல் AI Tools பயன்படுத்தி யூடியூப் சேனல் தொடங்குவது முற்றிலும் சாத்தியமான ஒன்று.

2. எந்த டாபிக் தேர்வு செய்வது ?

2026-ல் மற்றும் எதிர்காலத்தில் சிறந்த டாபிக் AI technology தான் AI apps and website reviews,AI கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்று கூறுவது.

3. AI YouTube Channels Monetization Strategies என்ன? 

AI கருவிகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து வந்தால் 1000 Subscribers மற்றும் 4000 பார்வை மணி நேரம் என்ற இலக்கு அடைந்தவுடன் adsence மூலம் வருமானம் வரத் தொடங்கும்.அது இல்லாமல் affiliate marketing செய்யலாம்.
வேறு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் செய்யவும்.

Post a Comment (0)
Previous Post Next Post